தீபாவளியை முன்னிட்டு மாரீசன் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.
அப்படி, ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு படத்தின் சிறப்பு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஃபஹத் ஃபாசிலும் வடிவேலும் செல்வது போன்ற இந்த போஸ்டர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


