Sorting by

×

‘அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலியில் பகலில் தமிழ், இரவில் இந்தி…’ – துரை வைகோ கண்டனம்

அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலி 102.1 பண்பலையில் இந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுவதற்கு மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “அகில இந்திய வானொலி (AIR) பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு நான் கண்டனம் தெரிவிக்கின்றேன்.

ரேடியோ
ரேடியோ

அதிகாலை 5:50 முதல் இரவு 11 மணி வரை தமிழிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5:50 வரை ஹிந்தியிலும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது மறைமுக ஹிந்தி திணிப்பின் செயல்பாடாகவே நான் கருதுகிறேன்.

சென்னை பண்பலை எண் 101.4 ஒலிபரப்பு 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 ஒலிபரப்பு 09.04.2025 இல் இருந்தும் இரவில் ஹிந்தி ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது டெல்லியிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.

விளம்பர வருமானம் இல்லாத குமரி FM ல் 24×7 தமிழ் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஹிந்திக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல. இதை இப்படியே தொடர அனுமதித்தால் அனைத்து பண்பலையும் முழு நேரமும் ஹிந்தி ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

எனவே ஒன்றிய அரசு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, உடனே திருச்சி மற்றும் சென்னை வானொலியில் முழு நேர தமிழ் ஒலிபரப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *