தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, திருநெல்வேலி உள்பட 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 31) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் சனிக்கிழமை (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி,விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


