Sorting by

×

அமெரிக்க பணியைத் துறந்து நாடு திரும்புமாறு குடிமக்களுக்கு கொலம்பியா அதிபர் அழைப்பு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள கொலம்பியா நாட்டு மக்கள் அந்நாட்டிலுள்ள பணியைத் துறந்து தாயகம் திரும்புமாறு அதிபர் குஸ்டாவோ ஃபெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டத்தை முடுக்கிவிட்டார். அதன் ஒரு பகுதியாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (ஜன.31) காலை கொலம்பியா அதிபர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்க பதிவில் கூறியிருப்பதாவது கொலம்பியா நாட்டு மக்கள் அமெரிக்காவிலுள்ள தங்களது பணியைத் துறந்து தாய் நாட்டிற்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். இடது சாரி அதிபரான குஸ்டாவோ, ’செல்வம் உழைக்கும் மக்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது’ என்றும் ’கொலம்பியாவில் ஒன்றாக இணைந்து சமூக செல்வத்தை கட்டியெழுப்புவோம்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த அழைப்பை ஏற்று கொலம்பியாவிற்கு திரும்பும் அந்நாட்டு மக்கள் அரசு அறிவித்துள்ள திட்டங்களில் இணைந்து தொழில் தொடங்கினால் குஸ்டாவோவின் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டீப்சீக் செயலிக்கு அமெரிக்கா தடை?

முன்னதாக, அமெரிக்கா புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளைப் போல நடத்துவதாக விமர்சித்த அதிபர் குஸ்டாவோ, ’புலம்பெயர்ந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஒரு மனிதன் தகுந்த கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்” என்றும் கூறி அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்களை ஏற்றி வந்த இரண்டு விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்க அனுமதி மறுத்தார்.

இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொலம்பிய அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகள், கொலம்பிய இறக்குமதிகள் மீதான வரியை 50% ஆக உயர்த்தும் திட்டம், கொலம்பிய பொருள்களுக்கான சுங்க ஆய்வுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவித்தார்.

இருதரப்புக்கும் மத்தியில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்ட மக்களை ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் அதிபர் டிரம்ப் கொலம்பியா மீது விதித்த 25 சதவிகித வரியை திரும்பப் பெறுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.

கடந்த 2020 முதல் 2024 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மக்களை ஏற்றி வந்த 475 விமானங்களை கொலம்பியா ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *