Sorting by

×

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மனித உரிமைகளைக் காப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்கள் இம்ரான் கான் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். கடந்த டிசம்பரில் நிறுவப்பட்ட இந்த வழக்குரைஞர்கள் குழுவானது, நார்வேயில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான பார்டியட் சென்ட்ரம் உடன் தொடர்புடையது.

இது குறித்து பார்டியட் சென்ட்ரம் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

”பார்டியட் சென்ட்ரம் சார்பாக நாங்கள் மகிழ்ச்சியுடன் இதனை அறிவிக்கிறோம். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக செய்த பணிக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *