சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ நீளத்துக்கு 3 வழித்தடங்களில் கட்டி முடிக்கதிட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட்வரை 45.4 கி.மீ தூரத்துக்கு பணிகள் நடைபெறுகின்றன.
இதில், 19 மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கமெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வழித்தடம் 5-ல் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

