நடிகர் ஆசிஃப் அலி நடித்த சர்கீட் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி தலவன் (thalavan), லெவல் கிராஸ் (level cross), அடியோஸ் அமிகோ (adios amigo), கிஷ்கிந்தா காண்டம், ரேகா சித்திரம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதனால், ஆசிஃப் அலிக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆசிஃப் அலி நாயகனாகவும் திவ்ய பிரபா நாயகியாகவும் நடித்த சர்கீட் திரைப்படம் மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இயக்குநர் தமர் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை… பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


