Sorting by

×

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை காலை 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்த யோகா நிகழ்ச்சி ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வினை கெளரவிக்கும் வகையிலும், அதில் கலந்து கொண்ட நபர்களை கௌரவிக்க வகையிலும் நடைபெற்றது.

இந்த யோகா நிகழ்ச்சியில் மூன்று விதமான யோகவுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பட்டதாக மருத்துவர் கார்த்திகா தெரிவித்தார்.

இந்த யோகா நிகழ்ச்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *