Sorting by

×

ஆயுள், மருத்துவக் காப்பீடுகள் மீதான வரியை நீக்க வேண்டும்: நிதின் கட்கரி கோரிக்கை!

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு ஜூலை 28 ஆம் தேதியன்று நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில், “மூத்த குடிமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுவது குறித்த ஆலோசனையை முன்னுரிமை கொடுத்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

“அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

Union Minister Nitin Gadkari writes to Finance Minister Nirmala Sitaraman.

Asks for withdrawal of 18% GST on health+ life insurance.
Health insurance premiums for senior citizens are already too high!

There is a need to bring down the GST to make policies affordable! pic.twitter.com/dWhA86q3tv

— Nikhil Jha (@NIKHILLJHA) July 31, 2024

ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி என்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை மீது வரி விதிப்பது போன்றது. வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையைக் கணக்கில் கொண்டு குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வாங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு வரி விதிக்கக்கூடாது என மத்திய அரசு கருதுவதாக நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”சேமிப்பிலிருந்து ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வேறுபடுத்துதல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான வருமான வரி விலக்கை மீண்டும் அறிமுகப்படுத்துதல், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்தல்” போன்றவற்றையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.

”வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் பாதிப்பு!”: ராகுல்காந்தி காட்டம்

நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் அவர்கள் தொழில்துறையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டது.

நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. கடைசி கூட்டம் கடந்த ஜூன் 22 என்று நடைபெற்றது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *