Sorting by

×

இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கு எதிராக செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

புதுதில்லி: “இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது” என சமாஜ்வாதி தலைவரும் மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராகச் செயல்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டில் குழப்புகிறார்கள். அவர்கள் அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்து நபர்களின் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகத்தினர் குறைவாகவே உள்ளனர்.

கேதார்நாத் கோயில் பின்புறம் பனிச்சரிவு!

VIDEO | “Since BJP came to power, they have tinkered with the reservation. They are working against the fundamentals of the reservation. BJP is tinkering with reservation of PDA (Pichhda, Dalit, Adiwasi). They have been continuously doing that. They have come to know that the… pic.twitter.com/SoYxrnYpRa

— Press Trust of India (@PTI_News) June 30, 2024

தில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தில்லி மற்றும் உ.பி.யில் இருந்து நியமனம் செய்யப்பட்டவர்களில் இந்த சமூகத்தை சேர்ந்த யாரேனும் ஒருவர் கூட துணைவேந்தர்களாக இல்லை.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 15 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். நாட்டில் இட ஒதுக்கீட்டின் அடிப்படை கருத்தியலுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது.

மேலும் மண்டல் கமிஷன், சுதந்திரப் போராட்டத் தலைவர்களான ராம் மனோகர் லோஹியா, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க விரும்பினர் என்றும் அதற்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்றும் அகிலேஷ் கூறினார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *