இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, அதன் வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்போடு உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!
ஜோஸ் ஹேசில்வுட் விலகல்
அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகியுள்ளார். இருப்பினும், அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாராவதற்காக அவர் அணியுடன் தொடர்ந்து இணைந்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!
அடிலெய்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஸ் ஹேசில்வுட் விலகிய நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்காக வேகப் பந்துவீச்சாளர்களான சீன் அப்பாட் மற்றும் பிரண்டன் டாக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை முதல் முறையாக ஜோஸ் ஹேசில்வுட் தவறவிடுவது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


