பாகிஸ்தான் மீதான போரில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டது.
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இருப்பினும், பாகிஸ்தானின் கருத்தை இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ஆயுதப்படைகளின் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் செய்தி நிறுவனத்திடம் ஜெனரல் அனில் சௌகான் பேசுகையில், தாக்குதலில் விமானங்களின் வீழ்ச்சி எண்ணிக்கை முக்கியம் அல்ல. அவை ஏன் வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம். இந்தியாவின் 6 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு.
India’s military confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in clashes with Pakistan in May.
Anil Chauhan, chief of defense staff of the Indian Armed Forces, spoke to Bloomberg TV on Saturday, while attending the Shangri-La Dialogue in… pic.twitter.com/9y3GW6WJfn
— Bloomberg TV (@BloombergTV) May 31, 2025
இதில், நல்ல விஷயம் என்னவென்றால், எங்கள் தவறைச் சரிசெய்து, மீண்டும் அதனைச் செயல்படுத்தி, நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு, அனைத்து ஜெட் விமானங்களையும் மீண்டும் பறக்கவிட்டோம்.
மோதலின்போதும், துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய ஆயுதங்கள் வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்கா உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் கருத்தையும் ஜெனரல் அனில் சௌகான் மறுத்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


