தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை நிறைவடைந்துவிட்டது. இனி பெய்யும் மழையெல்லாமே வடகிழக்குப் பருவமழையின் கணக்கில்தான் வரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, புள்ளிவிவரப்படி, தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் முடிவடைந்துவிட்டது. இன்று முதல் தமிழகத்தில் பெய்யும் மழை அனைத்தும் வடகிழக்குப் பருவமழையின் கீழ்தான்வரும்.
இதையும் படிக்க.. டபுள் ஆக்ஷன்: சிறு ஏடிஎம்களாக செயல்படவிருக்கும் ரேஷன் கடைகள்!
கடந்த 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டும் ஒரு சிறந்த தென்மேற்குப் பருவமழைக் காலமாக அமைந்தது. சென்னைக்கு ஒரு சாதனையை முறியடிக்கும் ஆண்டாகவே அமைந்துவிட்டது. மீனம்பாக்கம் இதுவரை சந்தித்த மழைக்காலங்களிலேயே இது மிகச் சிறந்த நான்காவது மழைக்காலமாகும். நுங்கம்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், சிறந்த மழைக்காலங்களில் 2024 பருவமழைக் காலம் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் மீனம்பாக்கம் (சென்னை விமான நிலையம்) தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழை) பெற்ற மழையின் அளவு
1. 2023 ஆம் ஆண்டில் 945 மிமீ
2. 1996 ஆம் ஆண்டில் 871 மிமீ
3. 1995 ஆம் ஆண்டில் 782 மி.மீ
4. 2024 ஆம் ஆண்டில் 741 மி.மீ
5. 1967 ஆம் ஆண்டில் 723 மி.மீ
6. 1985 ஆம் ஆண்டில் 720 மி.மீ
7. 1961 ஆம் ஆண்டில் 714 மி.மீ மழையைப் பெற்றுள்ளது.
அதுபோல நுங்கம்பாக்கம் கடந்த 211 ஆண்டுகளில் சந்தித்த மிக அதிகப்படியான தென்மேற்குப் பருவமழைக்காலம்
1. 1996-ஆம் ஆண்டில் 1155 மிமீ
2. 1870-ஆம் ஆண்டில் 860 மிமீ
3. 2011 – 853 மி.மீ
4. 2023-ஆம் ஆண்டில் 743 மிமீ
5. 1961-ஆம் ஆண்டில் 737 மிமீ
6. 1892-ஆம் ஆண்டில் 735 மிமீ
7. 1988-ஆம் ஆண்டில் 717 மி.மீ
8. 2024-ஆம் ஆண்டில் 694 மி.மீ மழையைப் பெற்றுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

