Sorting by

×

இன்ஃபோசிஸ் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு புகார்!

இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தில்

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்திருப்பதாவது, இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளிநாடுகளில் கிளைகளை நிறுவி அதன்மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜூலை 2017 முதல் 2021-2022 வரையிலான காலகட்டத்தில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி(ஐஜிஎஸ்டி) மூலம் ரூ. 32,000 கோடி வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாக ஜிஎஸ்டி இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு சேவைகளைப் பெற்று பயனடைந்துள்ள இன்ஃபோசிஸ் லிமிடட் பெங்களூரு நிறுவனம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி செலுத்தத் தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வரி ஏய்ப்பு புகார் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *