Sorting by

×

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

நேற்று (30.08.24) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை(31.08.2024) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

அதே பகுதியில், விசாகபட்டினத்திற்கு கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திர பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 80 கி.மி தொலைவிலும், கோபால்பூர்(ஒடிசா) தெற்கு – தென்மேற்காக 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கலிகங்பட்டினத்திற்கு அருகில் இன்று (31.8.24) நள்ளிரவு கரையை கடக்கிறது.

பிறந்து 6 நாள்களேயான குழந்தையைக் கொன்ற தாய்: காரணம்?

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மி வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 – 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்கள்..

இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *