Sorting by

×

இன்றைய ரயில் விபத்து நிலவரம்: மேற்குவங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 2 வேகன்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அதிலிருந்த இரண்டு வேகன்கள் மட்டும் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் தற்போது விபத்து நேரிட்டப் பகுதியில்தான், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அதே இடத்தில் இன்று மீண்டும் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Another rail accident today, in the same Phansidewa/ Rangapani area in North Bengal, where there was a most tragic accident just six weeks back!

We are very concerned about what is happening!!

— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2024

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார், அதில், இன்று மற்றொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது, வடக்கு வங்கத்தின் ரங்கபாணி பகுதியில். ஆறு வாரங்களுக்கு முன்பு மிக மோசமான ரயில் விபத்து நேரிட்ட அதே பகுதியில், இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்டில் செவ்வாய்க்கிழமை காலை ஹௌரா – மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இன்று மேற்குவங்கத்தில் ரயில் விபத்து நேரிட்டுள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *