Sorting by

×

“இரு அமைச்சர்கள் எனக்கு தொல்லை தருகின்றனர்” – புதுச்சேரி எம்எல்ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டு

தனது அரசியல் வளர்ச்சிக்கு எதிராக 2 அமைச்சர்கள் தொல்லை தருவதாக காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அதை மதிக்கிறோம். எனினும் சில சமயங்களில் கட்சியினர் கட் அவுட் வைத்து விடுகின்றனர். இந்நிலையில், கட் அவுட் வைத்தது தொடர்பாக ஒரு வாரம் முன்பு எனக்கு ஒரு சம்மன் வந்தது. விசாரித்தபோது, இதன் பின்னணியில் ஒரு அமைச்சர் உள்ளார் என்பது தெரியவந்தது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *