சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் தற்போது 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச் சாராயம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

