நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் அவரது 45-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கடட்த்தை எட்டியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இப்படத்திற்கு பேட்டைக் கருப்பன் எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்ததாகவும் இன்னும் சில நாள்களில் முழுமையாக நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மதராஸி படப்பிடிப்பு நிறைவு!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


