நடிகை நிவேதா தாமஸ் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ’35 சின்ன கதகாடு’ என்கிற தெலுங்கு படத்தில் உடல் எடையை அதிகரித்து நடித்தார். எடை கூடியதில் நிவேதா தாமஸ் ஆளே மாறினார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது உடல் எடை குறைந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ளனர். முழுமையாக குறைக்க முடியவில்லை என்றாலும் அதற்கான முயற்சியில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அளித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ராஜேஷ் – ஜீவா கூட்டணியில் புதிய படம்!
actor nivetha thomas’s new pictures were viral
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


