உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 இடங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம்.
இதை அனுபவிப்பதற்காக உள்நாட்டைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


