Sorting by

×

உலகம் முழுவதும் 3 நாள்களில் கல்கி 2898ஏடி வசூல் எவ்வளவு தெரியுமா..?

பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’.பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்த நிலையில் படக்குழு ரூ.191.5 கோடி வசூலித்ததாக போஸ்டரை வெளியிட்டது.

இரண்டாம் நாளான வெள்ளியன்று ரூ. 107 கோடியும், அதன் மூன்றாம் நாளான சனிக்கிழமையன்று ரூ.152.5 கோடியையும் வசூலித்தது. மூன்று நாள்கள் முடிவில் மொத்தமாக ரூ. 415 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரத்யங்கிரா சினிமா தனது எக்ஸ் தளத்தில் ரீடுவீட் செய்த பதிவில், “ கல்கி 2898 ஏடி வட அமெரிக்காவில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் இரண்டு நாள்களில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 74 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

Rebel Star Debba Box Office……..#Kalki2898AD #EpicBlockbusterKalki #Prabhas pic.twitter.com/EF8JceKGEP

— Prathyangira Cinemas (@PrathyangiraUS) June 30, 2024

#KALKI2898AD‌‌ will finish in the top five of the domestic box office this weekend after making $7.4 million in its first two days in North America. https://t.co/J8cYbceoqA pic.twitter.com/adSe1fcsfy

— Variety (@Variety) June 29, 2024

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *