சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரம் சரிந்து விழுந்ததில் நேர்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் எனத் தெரிகிறது.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலை 4-ல் கொதிகலன் பிரிவில் நடைபெறும் கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து இன்று (செப். 30) விபத்து நேர்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக காட்டூர் பகுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!
Ennore Thermal Power Plant construction accident: 9 dead
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


