Sorting by

×

எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கும் இயக்குநர் திருச்செல்வம்!

சின்ன திரை இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் இயக்கிய எதிர்நீச்சல் முதல் பாகத்திலும், கோலங்கள் தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் திருச்செல்வம் நடித்திருந்தார்.

இந்த இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் -2 தொடரிலும் ஜீவானந்தம் என்ற பாத்திரத்தில் திருச்செல்வம் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே நடிக்கின்றனர். நாயகியாக பார்வதி நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக சபரி நடிக்கிறார். இவர்களுடன் கனிகா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருவதால், அதே பாத்திரங்களின் நீட்சியாகவே கதை தொடர்ந்து வருகிறது.

இதில் வேல ராமமூர்த்தியின் (ஆதி குணசேகரன்) மகனாக நடித்துவரும் தர்ஷனை அறிவு என்பவர் கடத்திவிடுகிறார். அவரைக் காப்பாற்றும் வகையில் ஜீவானந்தம் என்ற பாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் அறிமுகமாகிறார்.

திரைப்படங்களில் வருவதைப் போன்று, ஆபத்தில் சிக்கியவர்களைக் காக்க தகுந்த நேரத்தில் நாயகனைப் போல ஜீவானந்தம் பாத்திரம் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீவானந்தத்தின் வருகை எதிர்நீச்சல் தொடரில் பல திருப்பங்களை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Serial director Thiruchelvam is also acting in the series Ethirneechal-2 serial in sun tv

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *