கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு வந்தேபாரத் ரயில், கிருஷ்ணராஜபுரம் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எா்ணாகுளத்தில் இருந்து ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – பெங்களூரு வந்தேபாரத் சிறப்பு ரயில் (எண்: 06001) அன்று இரவு 10 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் 26-ம் தேதி வரை வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 5.30 மணிக்குப் புறப்படும் பெங்களூரு – எா்ணாகுளம் சிறப்பு வந்தேபாரத் ரயில் (எண்: 06002) அன்று பிற்பகல் 2.20 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.
இந்த ரயில், திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த ரயிலானது கூடுதலாக கிருஷ்ணராஜபுரம் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில் நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

