Sorting by

×

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி, எம்டி யி செங் 6 என்ற கப்பல் சென்றுகொண்டிருந்தது.

மீட்புப் பணிகள்

இந்த நிலையில், அந்த கப்பலின் என்ஜின் அறையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் தபார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

ஐஎன்எஸ் தபாரின் இந்திய கடற்படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக ஹெலிகாப்டர் மற்றும் சிறியரக கப்பல்களும் சென்றன.

இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்தியில், அந்த கப்பலில் 14 இந்திய வம்சாவளி மாலுமிகள் இருப்பதாகவும், தீயின் தீவிரம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : செல்போன் சார்ஜிங் வசதி, சீட் பெல்ட்… சென்னை மின்சாரப் பேருந்தின் சிறப்பம்சங்கள்!

Indian Navy personnel are engaged in rescue operations after a fire broke out on an oil tanker heading towards Oman.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *