திருப்பதி – காட்பாடி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா மெமு விரைவு ரயில், ஜூலை 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி – காட்பாடி இடையேயான ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி – காட்பாடி முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 07659), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட வேண்டிய காட்பாடி – திருப்பதி முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 07582), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் ஜுலை 31 வரை பகுதியளவில் ரத்து
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட வேண்டிய காட்பாடி – ஜோலார்பேட்டை முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 06417), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வழித்தடத்தில், ஜோலார்பேட்டையிலிருந்து பகல் 12.45 மணிக்குப் புறப்படும் ஜோலார்பேட்டை – காட்பாடி முன்பதிவில்லா மெமு விரைவு ரயில் (வ.எண் 06418), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

