சின்னதிரை நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புது விடியோ திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியிடப்பட்டது. ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஷெரீஃப் இயக்கத்தில் பாலா நடிக்கிறார்.
இத்திரைப்படத்துக்கு ‘காந்தி கண்ணாடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.

காந்தி கண்ணாடி படத்தின் முதல் க்ளிம்ஸ் விடியோவும் பாலாவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. கையில் தீப்பந்தம் ஒன்றை ஏந்திக் கொண்டு பாலா நிற்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
படத்தின் உருவாக்க விடியோவைப் பார்க்கும்போது வித்தியாசமானதொரு திரைக்கதையில் பாலாவை திரையில் காட்டப் போகிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. இப்படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைக்கிறார்கள்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


