Sorting by

×

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதரண சூழலில் காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது சர்வதேச சமூகத்தில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஸாவுக்குச் செல்லும் உணவுகள் உள்பட பிற பொருள்கள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தை மீறி மக்களுக்குச் சென்றடைவது பெருமளவில் தடைபட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகையில், போதிய உணவின்றி தவிப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் 66 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.

போர் குற்றச் செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாகவும், மக்களை உணவுக்கக தவிக்கச் செய்து அதனால் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நிகழ்த்த இஸ்ரேல் காய் நகர்த்துவதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸாவில் 21 மாதங்களாக நீடிக்கும் சண்டைக்கு தீர்வாக, அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்படிக்கையாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிபடச் சொல்லியிருப்பதால் விரைவில் அப்பகுதியில் அமைதி நிலைநாட்டப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *