கேரளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நாட்டுப் படகு கவிழ்ந்ததில் 2 பலியானார்கள்.
தெற்கு கேரள மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் நாட்டுப் படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜோபி வி.ஜே (36) மற்றும் அருண் சாம் (37) ஆகியோர் பலியாகினர். அவர்களுடன் இருந்த ஜோஷி உயிர் தப்பினர்.
ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!
பலியான ஜோபியின் சகோதரர்தான் ஜோஷி. இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு திடீரென கவிழ்ந்தது. நீச்சல் தெரிந்த ஜோஷி நீந்தி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றார்.
நீச்சல் தெரியாத ஜோபி மற்றும் அருண் ஆகியோர் படகை சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தனர். அது மூழ்கவும் அவர்களும் மூழ்கி பலியாகிவிட்டனர். உள்ளூர்வாசிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் நடத்திய தேடுதலுக்குப் பிறகு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


