இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார்.
கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
நேர்காணலில் வெங்கட் பிரபு பேசியதாவது:
முதலில் 3 மணி நேரம் படம் என்பது எங்களுக்குமே சிறிது பயமாக இருந்தது. ஆனால் சில படங்களின் கதையில் அதைக் கூறுவதற்கு அவ்வளவு நேரம் செலவிட்டே ஆகவேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும்.
கோட் படத்தில் வாரிசு அரசியல்? எக்ஸில் அஜித் ரசிகருடன் வெங்கட் பிரபு வாக்குவாதம்!
அதிகமான சுவாரசியத்துக்காக எல்லாவற்றையும் கட்செய்துவிட்டு தரமுடியாது. 3 மணி நேரமாக இருந்தாலும் படம் சுவாரசியமாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இது குறித்து நம்பிக்கை இருக்கிறது.
இதை குறிப்பாக வைக்க டிரைலரிலேயே 3 நிமிடங்கள் வைக்க திட்டமிட்டோம். ஆனால் கதை அதிகமாக சொல்லிவிடுகிற மாதிரி இருப்பதால் 2.40க்கு குறைத்தோம்.
இனிமேல் விஜய் நடிக்க போவதில்லை என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்குமென நினைத்து அதை அப்படியே வைத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் செல்லக் குழந்தை கமல்..! நானி புகழாரம்!
கோட் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

