விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சக்திவேல் தொடரில் நடிகை லைலா டாவோ இணைந்துள்ளார். செல்வி என்ற பாத்திரத்தில் நடித்துவந்த மஹிமாவுக்கு பதிலாக லைலா நடித்துவருகிறார்.
கதைக்களத்துக்கு ஏற்ப லைலாவின் நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றம், தொடருக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், தொடரில் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் – சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு சக்திவேல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.
இந்தத் தொடரில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான மன் கீ ஆவாஸ் பிரதிக்யா என்ற தொடரைத் தழுவி, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

தனது உரிமைகளுக்காகப் போராடும் பெண்ணைக் காதலிக்கும் ரெளடியைச் சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதையின் வீரியம் மட்டுமல்லாமல் கதாபாத்திரங்களின் நடிப்பும் சக்திவேல் தொடருக்கு கிடைக்கும் வரவேற்புக்கு காரணம் எனக் கூறலாம்.
அந்தவகையில் செல்வி என்ற பாத்திரத்தில் நடித்துவந்த மஹிமாவுக்கு பதிலாக லைலா டாவோ நடிக்கவுள்ளார். இவரின் வசீகரமான தோற்றத்துக்கு ஏற்ப கதாபாத்திரமும் அமைந்துள்ளதால் ரசிகர்கள் பலர் லைலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


