சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் ஏற்படும் நெருக்கடிகளை சந்திக்கும் குடும்பம் என நகைச்சுவையாக (ஹாரர் – காமெடி) இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
முதல் இரவுக் காட்சியுடன் தொடங்கும், படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், பலரும் நேர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் கதைக்களம் வித்தியாசமாக உள்ளதாகவும், நிஜ வாழ்க்கையில் சீரியல் பார்க்கும் பெண்களில் பலர் ஆவி புகுந்ததைப் போலவே செயல்படுவதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார். டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சினிமா பண்டி படத்தை எடுத்து கவனம் ஈர்த்த, எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி, இயக்குநர் பிரவீன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ரூ.1.72 லட்சத்துக்கு சிக்கந்தர் பட டிக்கெட்! அதிர்ச்சி அளிக்கும் சல்மான் கான் ரசிகர்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


