Sorting by

×

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவிக்கும் ‘ரசவாதி’

‘ரசவாதி’ திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சாந்தகுமார் – நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் ரொமாண்டிக் கிரைம் டிராமாவாக உருவான திரைப்படம் ‘ரசவாதி’. இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவராக நடித்திருந்தார்.

கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘ரசவாதி’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் மற்றும் இயக்குநர் சாந்தகுமார் கூட்டணியும் மூன்றாவது முறையாக இணைந்திருந்தது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைக் கடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்த வண்ணமுள்ளது.

சுமார் 700 திரைப்படங்கள் போட்டியிட்ட 15-வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழா மற்றும் நியூ ஜெர்ஸியின் இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் ‘ரசவாதி’ படத்துக்காக அர்ஜுன் தாஸ் சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றார்.

இந்தாண்டு (2025) துவக்கத்தில், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பு விருதுக்காக, ரசவாதி உள்ளிட்ட உலகெங்கிலுமிருந்து வந்த 10 திரைப்படங்கள் போட்டியிட்டன. அதில், ரசவாதி படத்துக்காக ஒலி வடிவமைப்பாளர் தபாஸ் நாயக் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தற்போது பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகளில், ‘ரசவாதி’ படம் 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அதன் இயக்குநர் சாந்தகுமார், தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *