Sorting by

×

சாம்பியன் இந்தியா! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இதுவரை 4 ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. இந்தியாவுக்கு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன்கள் கபில்தேவ், மகேந்திர சிங் தோனியின் வரிசையில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் அக்‌ஷர் படேல். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தது. அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

டி20 போட்டி: ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் ஹெண்ட்ரிக்ஸ் 2-வது ஓவரில் அவுட்டானார். தொடர்ந்து கேப்டன் மார்க்ரமும் 3-வது ஓவரில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இருப்பினும், டி காக், ஸ்டப்ஸ் இணை நிதானமாக விளையாடி தென்னாப்பிரிக்காவை மீட்டது. 31 ரன்களுக்கு ஸ்டப்ஸ் அவுட்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய க்ளாஸன் அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்காவை வெற்றியின் அருகே கொண்டு சென்றார். 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து க்ளாஸன் அவுட்டானார்.

18-வது ஓவரை வீசிய பும்ரா, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி வாய்ப்பை பறிக்க முக்கிய காரணமாக அமைந்தார்.

19-வது ஓவரில் அக்‌ஷர் படேல் 4 ரன்கள் மட்டுமே கொடுக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் மில்லரும் ரபடாவும் அவுட்டாக இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *