Sorting by

×

`சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு!’ – கள்ளக்குறிச்சி ஆட்சியர்

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்தால் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம்தான் `நல்ல சமாரியன்’ (Good Samaritan) திட்டம். அதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பின் முதல் ஒரு மணி நேரம் மருத்துவ ரீதியாக பொன்னான நேரம் (Golden Hour) எனப்படுகிறது.

விபத்து

அந்த நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், உடனடியான முதலுதவி செய்ய வேண்டியது மிக அவசியம்.  அதனை கருத்தில் கொண்டு சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்து, அவர்களை அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கும் நபர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை (Golden Hour) மருத்துவமனையில் சேர்க்கும் நபர் நல்ல சமாரியன் என அழைக்கப்படுவார்.

அவர்களுக்கு ஒவ்வொரு சம்பவத்திற்கும் மத்திய அரசிடம் இருந்து ரூ.5,000, தமிழக அரசிடம் இருந்து ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 பரிசுத் தொகை வழங்கப்படும். உதவி செய்த நபருக்கு அரசின் சார்பில் ‘Certificate of Appreciation’ வழங்கப்படும். உதவி செய்த நபருக்கு எந்தவிதமான சட்ட சிக்கலோ, விசாரணை சுமையோ ஏற்படாது என அரசு உறுதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் செயல்பாடுகளை மாதந்தோறும் மதிப்பாய்வு செய்து, பரிசுத் தொகை தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆட்சியர் பிரசாந்த்

பொதுமக்களுக்கு அரசு விடுக்கும் வேண்டுகோள் இதுதான். சாலை விபத்துகள் ஏற்படும்போது பயம் அல்லது தவறான புரிதல்கள் காரணமாக பலர் உதவி செய்ய தயங்குகின்றனர். உதவி செய்த நபருக்கு எந்தவிதமான சட்டபூர்வ சிக்கலும் ஏற்படாது என அரசு மீண்டும் வலியுறுத்துகிறது. மனித நேயத்தின் அடிப்படையில் உதவி செய்து பலரின் உயிரைக் காப்பாற்றும்படி அரசு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *