Sorting by

×

சிவகங்கை | வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் சிதறிய வீடு – இளைஞர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் வீடு சிதறியது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் இன்று திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி சிபிசாய் சவுந்தரயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி, எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *