Sorting by

×

சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்!

மகாராஜா படத்தின் சீன மொழி வெளியீட்டின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியது.

திரையரங்க வெளியீட்டில் ரூ.110 கோடியையும் ஓடிடியில் பரவலான கவனத்தையும் பெற்றது. முக்கியமாக, பாலிவுட்டில் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்புக் கிடைத்தது.

இதையும் படிக்க: சூர்யா – 45 படத்தில் ஸ்வாசிகா!

இந்த நிலையில், சீனாவில் இப்படம் 40 ஆயிரம் திரைகளில் நேற்று (நவ.29) வெளியானது. அதற்கு ஒருநாள் முன்பு சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டது.

முதல் நாளில் மட்டும் மகாராஜா ரூ. 5 கோடி வரை வசூலித்ததாம். சிறப்பு திரையிடலுடன் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் செய்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை சீன ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இப்படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்றே தெரிகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *