நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பேசினார்.
இந்த சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜேஷ் என்பவர் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் அளித்தார்.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
இந்த இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீஸார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

