சுந்தர்.சி நடிப்பில் உருவான ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
24 HRS புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே. திருஞானம் எழுதி இயக்கியுள்ள ‘ஒன் 2 ஒன்’ படத்தில் சுந்தர். சி கதாநாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லன் கதராபாத்திரத்தை ஏற்றுள்ளார். மகாராஜா படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்த படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் அதிரடியாக இதுவரையிலும் இல்லாத ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர். சி நடித்துள்ளார்.
அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.. யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
இவர்களுடன் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா முக்கிய பாத்திரத்திலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இன்று இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

