Sorting by

×

`செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க!’- கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டம் கோபிசெட்டிபாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தலின்போது வாக்கு கேட்டு வந்தாரே, ராஜினாமா செய்வது குறித்து மக்களிடம் கேட்டாரா? மக்கள் கவலைப்பட வேண்டாம். எடப்பாடி தொகுதியைவிட கோபிசெட்டிபாளையம் தொகுதியை அதிமுக ஆட்சியில் உயர்த்துவோம். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசைப் பாராட்டி விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று செங்கோட்டையன் அதைப் புறக்கணித்தார். இன்று யார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தவெக-வில் இணைந்துள்ளார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

விஜய் - செங்கோட்டையன்
விஜய் – செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கோட்டையன் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் விழாவில் எம்ஜிஆர் படமும் இல்லை. ஜெயலலிதா படமும் இல்லை. அதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என தலைமைக்கு 10 நாள் கெடு விடுத்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம். அப்போதாவது திருந்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்.

அவரைப்போல சுயநலவாதி நான் அல்ல. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதன் முதலில் கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும். 2026 தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் அதிக வாக்குகள் வித்தியசத்தில் அதிமுக வெற்றி பெறும். தூய்மையான ஆட்சி கொடுப்போம் என்று கூறுகிறார். அப்படியென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா தூய்மையான நல்லாட்சி கொடுக்கவில்லையா? துண்டை மாற்றினால் கருத்தை மாற்றிக் கொள்வாரா செங்கோட்டையன். அவர் மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் அதிமுக-வை வீழ்த்த முடியாது. அதிமுக தொண்டர்களை நம்பியுள்ள கட்சி. நான் இல்லையென்றால் வேறுயாராவது பொதுச் செயலாளராக வருவார்கள். துரோகிகளுக்கு அதிமுக-வில் இடமில்லை.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

கடந்த அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, 67 கலைக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். விலைவாசி விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரிசி தொடங்கி அன்றாடம் பயன்டுத்தும் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்? தமிழகத்தில் 4 பேர் முதல்வர்களாக செயல்படுகின்றனர். நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கி சீர்கெட்டுள்ளது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் மட்டும் 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளார்கள். நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ரூ.800 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது பாதி அமைச்சர்கள் சிறையில்தான் இருப்பார்கள். நமக்கு தேர்தல் களத்தில் எதிரிகளே இருக்க மாட்டார்கள்” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *