சென்னையில் சனிக்கிழமை (ஆக. 30) நள்ளிரவு பெய்த அதிகனமழையால், அதிலும் குறிப்பாக, ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு, மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேக வெடிப்பு காரணமாக சென்னையில் அதிகனமழை பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின் மழை நிலவரம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு விவரம் கேட்டறிந்ததாக மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, மழையால் பெருமளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்று முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைக்கேட்டறிந்த அவர், எத்தகைய மழை சூழலையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியதாகவும் கனமழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிடவும் அவர் அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
Heavy rain in Chennai: Chief Minister inquires about the rain impact from Germany over the phone
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


