Sorting by

×

சென்னையில் 6 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகசக் கண்காட்சி நடைபெறவுள்ளதால், அக். 1-ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விமானப்படை தின அணிவகுப்பு – 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் 6-10-2024 அன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு ஒத்திகைகள் 1.10.2024 முதல் 5.10.2024 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.

யாஹ் என சொல்லவேண்டாம்.. இதுவொன்றும் காபி கடையல்ல: டி.ஒய். சந்திரசூட்

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரைப் பகுதியை 1.10.2024 முதல் 6-10-2024 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருள்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூா்யகிரண் குழு, வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டா் அணி ஆகிய சாகசங்கள் நிகழ்த்தப்படவுள்ளன.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *