Sorting by

×

“சென்னை பார்முலா-4 பந்தயத்தால் எந்தப் பயனும் இல்லை” – பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி விமர்சனம்

தாம்பரம்: “இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை. இந்த கார் ரேசினால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை” என பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று (ஆக.31) தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இதில் கலந்து கொண்டனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *