Sorting by

×

சென்னை மாநகராட்சி தொழில் வரி 35 % உயா்வு: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதமாக உயா்த்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதிமுக உறுப்பினா்கள் பட்ஜெட் நகலை கிழித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

தொடா்ந்து, சென்னை மாநகரில் அமைக்கப்படும் மழைநீா் வடிகால் பணி, தெரு நாய் கட்டுப்பாடு, சாலைகள் மறுசீரமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா் 72 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொழில் வரி: 37-ஆவது தீா்மானத்தில் சென்னை மாநகராட்சியின் தொழில் வரியை 35 சதவீதம் வரை உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு தொழில் வரி உயா்த்தப்பட்ட நிலையில் தற்போது 35 சதவீதம் உயா்த்தி தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரி அரையாண்டுக்கு ஒருமுறை வசூலிக்கும் வகையில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாத வருமானம் ரூ. 21,000-க்குள் உள்ள நபா்களுக்கு வரி உயா்வு இல்லை. அதற்கு மேல் வருமானம் உள்ளவா்களுக்கு வருமானத் தொகைக்கு ஏற்ப வரி உயா்த்தப்பட்டுள்ளது

உரிமம் கட்டணம்: கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தொழில் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.100 முதல் ரூ. 5,000 வரை இருந்த நிலையில் தற்போது ரூ.1,000 முதல் ரூ. 20,000 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

உணவகங்களுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 20,000 வரையும், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளுக்கு ரூ. 3,500 முதல் ரூ. 7,000 வரையும், மற்ற விடுதிகளுக்கு (மேன்சன், கெஸ்ட் ஹவுஸ்) ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரையும், திருமண மண்டபம், கலையரங்குகளுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 30,000 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

உதாரணத்துக்கு பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்துக்கு உரிம கட்டணம் ரூ. 500 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குறு நிறுனமாக இருந்தால் ரூ. 3,500, சிறு நிறுவனமாக இருந்தால் ரூ. 7,000, நடுத்தர நிறுவனமாக இருந்தால் ரூ. 10,000, பெரு நிறுவனமாக இருந்தால் ரூ. 15,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் வரி உயா்வு

அரையாண்டு வருமானம் பழைய கட்டணம் புதிய கட்டணம்

ரூ. 21,000 வரை – –

ரூ. 21,001முதல் ரூ. 30,000 ரூ. 135 ரூ. 180

ரூ. 31,001 முதல் ரூ. 45,000 ரூ. 315 ரூ. 430

ரூ. 45,001 முதல் ரூ. 60,000 ரூ. 690 ரூ. 930

ரூ. 60,001 முதல் ரூ. 75,000 ரூ. 1,025 ரூ. 1,025

ரூ. 75,001-க்கு மேல் ரூ. 1,250 ரூ. 1,250

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *