Sorting by

×

“சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்” – பாஜக நயினார் நகேந்திரன்

அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

அன்றைய செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான அரசியல் வேண்டும்” என்பதற்காக தவெகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார் செங்கோட்டையன்.

பாஜகவின் வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என திமுக கூட்டணி கட்சிகளும், திமுக வழிகாட்டுதலில் தவெகவில் இணைந்தார் என்று பாஜக கூட்டணியினரும் மாறி மாறி பேசி வருகின்றனர்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
செங்கோட்டையன்

செய்தியாளர் சந்திப்பில் இதைக் குறிப்பிட்டு பேசியிருந்த செங்கோட்டையன், “இது என் முடிவு. இதற்குப் பின்னால் யாருமில்லை. தவெகவில் இணைவதற்கு முன் சேகர் பாபுவையோ அல்லது பாஜகவைச் சார்ந்த வேறு யவரையும் நான் சந்திக்கவில்லை. என்னுடன் எந்தக் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

நான் யாருடனும் சந்தித்தது தொடர்பான புகைப்படம் அல்லது வேறு எதாவது ஆதாரங்கள் இருந்தால் காட்டுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பேசியிருக்கும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜக திட்டமிட்டு அண்ணன் செங்கோட்டையனை தவெகவிற்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

செங்கோட்டையன் திமுக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்துவிட்டதன் பின்னர் தவெகவில் இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சேகர் பாபு செங்கோட்டையனை சந்தித்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அண்ணன் செங்கோட்டையன் மிகப்பெரிய தலைவர். அதில் மாற்றுக் கருத்தில்லை. அவரை இதுவரை மதித்தோம், நாளையும் மதிப்போம். ஆனால், யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்தான் மதிப்பு.

என்னைப் பொறுத்தவரை, செங்கோட்டையன் எடுத்தது தவறான முடிவு. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று பேசியிருக்கிறார் நயினார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *