ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட கலவரத்தை மையப்படுத்தி உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: பாக்ஸர் வடிவேலு, ஜெயிலர் ஜெயக்குமார்… உண்மை சம்பவமா சொர்க்கவாசல்? – திரை விமர்சனம்
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியின் வன்முறைக் காட்சிகளும் கிளைமேக்ஸும் கவனம் ஈர்த்துள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சொர்க்கவாசல் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


