எண்ம முறையில் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது, ஒருவேளை, பணப்பரிமாற்றம் முழுமையடையாவிட்டால், உடனடியாக, பணப்பரிமாற்றம் மேற்கொண்டவரின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
யுபிஐ மூலம் பெரும்பாலான பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் மக்களின் நலன் கருதி இந்த மிக முக்கியமான மாற்றம் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
தேசிய பணப்பரிவர்த்தனை வாரியம் கொண்டு வந்திருக்கும் இந்த நடைமுறைப்படி, ஒருவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஆனால், மற்றவரின் வங்கிக் கணக்குக்குச் சென்று சேராவிட்டால், உடனடியாக எடுத்தவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
இதுநாள்வரை, 36 மணி நேரம் முதல் ஏழு நாள்கள் என்று ஒவ்வொரு விதமான பணப்பரிமாற்றத்துக்கும், எடுத்தத் தொகை திரும்ப வர கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொல்லை இனி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழி பிறக்கிறது!
இது மட்டுமல்ல, ஒருவர், தவறான யுபிஐ எண்ணுக்கு பணத்தை செலுத்திவிட்டால், பணத்தைப் பெற்றவரின் வங்கியைத் தொடர்புகொண்டு ஒருவர் தான் தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


