Sorting by

×

டயானாவின் நகையை மேஹன் மார்க்கல் அணிய தடை விதித்த இளவரசர் வில்லியம்!

ஹாரி – மேஹன் மார்க்கல் திருமணத்தின்போது, இளவரசி டயானாவின் நகைகளை அணிந்துகொள்ள, இளவரசர் வில்லியம் அனுமதிக்கவில்லை என்று, ராயல் குடும்பம் பற்றிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரோப் ஜாப்சன் என்பவர் எழுதிவரும் கேத்தெரைன், வேல்ஸ் இளவரசர் என்ற புத்தகத்தில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேல்ஸ் இளவரசர் வில்லியம் – தனது தாயின் நிச்சயதார்த்த மோதிரத்தைக் கொடுத்து கேட் மிடில்டன்னிடம் காதலை வெளிப்படுத்தியவர் – மேகன் மார்க்கலை திருமணம் செய்வது என்று இளவரசர் ஹாரியின் முடிவு குறித்து ஆரம்பம் முதலே கவலைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டன் மன்னர் – இளவரசர்

இந்த புத்தகத்தில் இருப்பதாக வெளியான தகவலின்படி, இளவரசர் வில்லியம்ஸ் தனது 39 வயதான இளைய சகோதரரிடம், மேஹனுடனான உறவை சில காலம் அப்படியே வைத்திருக்கவும், அதன் மூலம், அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களை, குடும்பத்துக்குள் நுழைவதற்கு முன்பு பழகுவதற்கு வசதியாக இருக்கும் என்று கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, அரச குடும்பத்துக்குள் மேஹன் மார்க்கல் இணைவதற்கு முன்பு, சகோதரர்கள் இருவருக்குள் எப்படி பூசல் உருவானது என்பதையும் இந்த புத்தகம் விவரிப்பதாகக் கூறுகிறது.

இளவரசி டயானாவின் நகைகள் சிலவற்றை, இளவரசர் வில்லியமின் மனைவி அணிந்திருந்தாலும் கூட, தனது சகோதரரின் மனைவியாகப் போகும் நபர் அணிய அனுமதிக்கக் கூடாது என்றும், அவரது அரச குடும்ப பதவியைப் பொருத்து இது கொண்டுவரப்பட வேண்டும் என்று ராணி எலிசபெத்திடம் வில்லியம் உறுதிமொழி வாங்கிக்கொண்டதாகவும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாம்.

நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையே மாறியது: மக்கள் கண்ணீர்

அரச குடும்பத்துக்குள் மேஹன் நுழைவதற்கு முன்பே, வில்லியம் – ஹாரி உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும், ஹாரி – மேஹன் இடையேயான நட்பு வேகமாக வளர்வதைக் கண்டு வில்லியம் தம்பதி கவலை அடைந்ததாகவும், அவர்களை சந்திக்க ஹாரி, அமெரிக்க முன்னாள் நடிகையான மேஹனை அழைத்துவந்போது அவர்களுக்குள் இருந்த விரிசல் மேலும் மோசமானதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ஹாரி வெளியிட்ட புத்தகத்தில், வில்லியம் தன்னை நேரடியாக தாக்கி கீழே தள்ளியதாக தெரிவித்திருந்தது பரபரப்பாகப் பேசப்பட்டிருந்தது. மேலும் அந்தப் புத்தகத்தில், ஒரு முறை மேஹன் தனது உதட்டுச் சாயத்தை மறந்துவிட்டு வந்தபோது, அதனை கேத் மிடில்டனிடம் கேட்கச் சொன்னதாகவும், அப்போது, கேத் அதிர்ச்சியடைந்து, ஆனாலும் ஒருவழியாக சமாளித்துக்கொண்டு உதட்டுச் சாயத்தைக் கொடுத்ததாகவும், அப்போது மேஹன் அதில் தனது விரலால் தடவி உதட்டில் பூசிக்கொண்டதைப் பார்த்த கேத் முகம் சுளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அரச குடும்பத்தில் நடந்த தகவல்களைப் பற்றி பேசிய, ஹாரியின் புத்தகம் ஸ்பேர் வெளியான போது உலகமே கடும் அதிர்ச்சியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *