டிஎன்பிஎல் டி20 தொடரில் எலிமினேட்டர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இதன் மூலம் அந்த அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது. தோல்வி கண்ட திருப்பூா், குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு வந்துள்ளது.
எலிமினேட்டா் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபா அபரஜித் 72, ஜெகதீஷன் 25, அபிஷேக் தன்வர் 22 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் அரைசதமடித்தார். தொடக்க வீரர் ஷிவம் சிங்கும் அரைசதமடித்தார். ஷிவம் சிங் 64 ரன்களுக்கும், 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஆக.2ஆம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

